தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பார் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு - விருதுநகர் குற்ற செய்திகள்

வத்திராயிருப்பு அருகே தனியார் பார் (private wine shop) முன்பு இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

வத்திராயிருப்பு தனியார் பார் முன்பு வாலிபரை வெட்டிக் கொலை
வத்திராயிருப்பு தனியார் பார் முன்பு வாலிபரை வெட்டிக் கொலை

By

Published : Nov 16, 2021, 11:48 AM IST

விருதுநகர்:வத்திராயிருப்பு அருகே கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் வத்திராயிருப்பு - கிருஷ்ணன் கோயில் சாலையில் தனியார் பார் முன்பு வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வத்திராயிருப்பு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சுபாஷ் முகத்தில் பலத்த வெட்டுகளுடன் கொலைசெய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பின்னர் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். இக்கொலை சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சேதமடைந்த தளவானூர் தடுப்பணை; வெடி வைத்து தகர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details