தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்னை காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - தமிழ் குற்றச் செய்திகள்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth hacked to death due to family problem!
Youth hacked to death due to family problem!

By

Published : Sep 16, 2020, 10:15 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் தவசிகுமார் (23). இவரது அக்கா ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகனுக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இதில் தவசிகுமார் தனது அக்காவிற்கு ஆதரவாக, முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) நெடுங்குளம் அருகே இருந்த தவசிகுமாரிடம், முருகனின் உறவினர் சுந்தர மூர்த்தி மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது சுந்தரமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் தவசிகுமாரை வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுந்தர மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

ABOUT THE AUTHOR

...view details