தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் குடிபோதையில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு - youth died during the festivel

விருதுநகர்: கோயில் திருவிழாவின் போது குடிபோதையில் தடுமாறி தெப்பக்குளத்தில் விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youth-fall-into-teppakulam-and-death-during-festival

By

Published : Oct 17, 2019, 2:51 PM IST

விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையான்செட்டி தெருவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு அங்கமாக அப்பகுதி மக்கள் கோயிலிலிருந்து தெப்பக்குளத்திற்கு கரகம் எடுத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு கரகம் எடுத்துச் செல்லும் போது அப்பகுதியைச்சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) என்பவர் குடிபோதையில் நிலைதடுமாறி தெப்பத்திற்குள் விழுந்தார்.

விழுந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் தேடி உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை உடற்கூறாய்விற்காக விருதுநகர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விருதுநகர் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'அசுரன்' சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் - ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details