தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு - virudhunagar news in tamil

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த வாலிபரின் உடலை வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

youth-died-fall-into-well-near-aruppukottai
அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

By

Published : Sep 6, 2021, 8:58 AM IST

விருதுநகர்:சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரனின் மகன் ராஜேஷ்குமார்(34). வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன அவரை பல இடங்களில், அவரது குடும்பத்தினர் தேடிவந்தனர்.

எங்கும், கிடைக்காததால், மகனை காணவில்லை என ஆலங்குளம் காவல் நிலையத்தில் சந்திரன் புகார் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று(செப். 5) சனிக்கிழமை விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மிதப்பதைக் பொதுமக்கள் கண்டுள்ளனர்.

தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி வாலிபரின் உடலை மீட்டனர். மேலும், ராஜேஷ்குமார் பயன்படுத்திய செல்போன், அவர் கொண்டு வந்த வண்டியின் சாவி கிணற்றின் மேல்பகுதியில் இருந்தது.

ஆலங்குளம் காவலர்கள் வாலிபர் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விவசாயி இறந்தது கடன் பிரச்சனையா, அல்லது காதல் தோல்வியா என்பது குறித்து வெம்பக்கோடை காவல் நிலையத்தினர் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தை, மகன்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details