விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு செல்போனில் தவறுதலாக அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பு மூலம் சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் சிங்காரவேலன் (25) அறிமுகமாகி இருக்கிறார்.
நாளடைவில் இருவருக்கும் தொலைபேசி மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி சிங்காரவேலன் சேத்தூர் பகுதிக்கு வந்து சிறுமியை அழைத்துக் கொண்டு சேலம் ஓமலூர் சென்றுள்ளார்.