தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது! - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சிறுமியைக் கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

By

Published : Jun 26, 2021, 10:56 AM IST

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர், கோபால் (28). இவர் கட்டட கூலித்தொழிலாளர்.

கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற கோபால், அவரின் வாயைத் துணியால் கட்டி, தனிமையான இடத்திற்குத் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தவுடன் கோபால் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து, மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், சிறுமிக்கு நிகழ்ந்தது பாலியல் வன்கொடுமை எனத் தெரியவர, அச்சிறுமியின் குடும்பத்தினர் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் கோபாலைப் பிடித்து விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.

இதையும் படிங்க: குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details