விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
குப்பை மேட்டில் போதைப்பொருள் பதுக்கிவைத்த இளைஞர் கைது! - போதை பொருள் பதுக்கி வைத்த இளைஞர் கைது
விருதுநகர்: ராஜபாளையம் அருகே இரண்டரை கிலோ போதைப்பொருளை குப்பை மேட்டில் பதுக்கிவைத்திருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இனியன்
அவர் அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் இனியன் (22) என்பதும், அப்பகுதி குப்பை மேட்டில் இரண்டரை கிலோ போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின் இனியனை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.