தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: 8 பேர் கைது - விருதுநகரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த காதலன், உள்ளிட்ட எட்டு பேரை விருதுநகர் ஊரக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது
கைது

By

Published : Mar 22, 2022, 6:30 AM IST

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (27). இவரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஹரிஹரன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ஹரிஹரன் நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), டிரைவர் பிரவீன் (21), மற்றும் 9,11,12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நான்கு பேரும் ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என கூறி பல முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். இதில் ஜூனத் அகமது 10ஆவது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும், மற்றொருவர் 22ஆவது இளைஞர் அணி உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூனத் அகமது பெயர் இடம்பெற்ற திமுக போஸ்டர்

பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அந்த வீடியோவை அவர் தனது செல்போனுக்கு அனுப்பும்படி கூறி இளம்பெண்ணை மிரட்டி அவரும் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். ு பள்ளி மாணவர்கள் நான்கு பேர், ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத்அகமது ஆகியோரை போலீசார் நேற்று(மார்ச் 21) கைது செய்தனர்.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் பரபரப்பு - கைதான கணவனுக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

ABOUT THE AUTHOR

...view details