தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியாக வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்- இளைஞர் கைது! - Young man arrested for trying to sexually assault

தனியாக வசித்த மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை காவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் கைது
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் கைது

By

Published : Jan 21, 2022, 5:25 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி வ.உ.சி தெருவில் 65 வயதான மாரியம்மா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இதனையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மூதாட்டி இரவில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்து அவரை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

இதனையடுத்து துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்து விட்டு மணிகண்டன் தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த மூதாட்டி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மணிகண்டனை கூமாப்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க:அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவதில்லை- மத்திய அரசு விளக்கம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details