தமிழ்நாடு காவல் துறையினருக்குத் தற்காப்பு, மன உறுதியை மேம்படுத்த யோகா, கராத்தே போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்ட சரக காவல் நிலைய பகுதியில் உள்ள காவலர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின்பேரில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
காவலர்களுக்குத் தற்காப்பு பயிற்சி ராஜபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 270 காவலர்களுக்குத் தற்காப்பு பயிற்சியான கராத்தே, மன உளைச்சலிலிருந்து விடுபடுவதற்காக யோகா பயிற்சிகள் நடைபெற்றன.
இதில் ஆண் காவலர்கள், பெண் காவலர்கள் கலந்துகொண்டனர். யோகா, கராத்தே பயிற்சிகளை தளவாய்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் மற்ற காவலர்களுக்குச் செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.