விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட அம்மன்பட்டி கிராமத்தில் 1140 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 400 நபர்களின் பெயர்கள் விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி கிராம வாக்காளர் பட்டியலிலும், அதே வாக்காளர்கள் ராமநாதபுரம் மாவட்ட முத்துப்பட்டி கிராமத்தில் வாக்குரிமை இருப்பதால் 400 நபர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ள நிலை உள்ளது.
அவர்கள் தங்கள் பகுதியில் வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் அம்மன்பட்டி பகுதியில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்களின் பெயர்களை நீக்கக்கோரி இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட வாக்காளர் பட்டியலுடன் திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.