தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு விளைச்சல் அதிகரிப்பு - உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

work on making jaggery
work on making jaggery

By

Published : Jan 14, 2020, 5:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் தொடர் பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் விவசாயப் பொருள்களின் உற்பத்தி சிறப்பான முறையில் உள்ளது. அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள், கண்மாய்களில் நீர் பெருகியுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், கரும்பிலிருந்து பெறப்படும் சாறுகளிலிருந்து உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி

கரும்புகளில் இருந்து சாறு எடுத்து அதனை சுமார் ஒரு மணி நேரம் காய்ச்சி பக்குவப்படுத்தி கரும்புச் சாறைப் பதப்படுத்தி, அதனை உருட்டு வெல்லமாக மாற்றி டன் கணக்கில் வணிகக் கடைகளுக்கும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது 1 கிலோ உருட்டு வெள்ளம் 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: காய்கறிகளின் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details