விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாவாலி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கோயில்கள், பள்ளி வளாகங்கள் உள்ளப் பகுதியில் புதிதாக மதுபானக்கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, அவர்களின் நல்லொழுக்கம் சீர்கெடும் என்பதால், மதுபானக் கடையை திறக்கக் கூடாது எனக்கூறி, அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சு நடத்திய அரசு அலுவலர்கள், முறையான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், மீண்டும் கடையை திறக்கும் பணி நடந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடையின் முன்பு அமர்ந்து கடந்த 3 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் மதுவிலக்கு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி பேச்சுவார்த்தை நடத்தினார்.