தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்திய கணவன் - நாகர்கோவில் கணவன் மனைவி கத்திக்குத்து

கன்னியாகுமரி: குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கணவன் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Women stabbed by husband  in nagarkovil
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்திய கணவன்

By

Published : Oct 5, 2020, 5:41 PM IST

நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (35), மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவருக்கும், ஜோஷி (32) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜோஷி விவகாரத்திற்கு விண்ணப்பித்து சதீஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் அடிக்கடி குடித்துவிட்டு ஜோஷியுடன் பிரச்னை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் ஜோஷி வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்துக்குச் சென்று சதீஷ், வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் ஜோஷி சரிந்து விழ சதீஷ், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருக்கு கத்திக்குத்து - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details