விருதுநகரில் நேருஜி 1ஆவது, 2ஆவது தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் விருதுநகர் நகராட்சி சார்பில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனையடுத்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர்: நேருஜி தெருவில் பெண்கள் நகராட்சியில் இருந்து முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Women involved in road blockade with empty buckets in Virudhunagar
இதையடுத்து தகவலறிந்து வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் குடிநீர் கிடைக்க நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்படும் என காவல் துறையினர் வாக்குறுதி அளித்த பின்பு பெண்கள் கலைந்து சென்றனர்.
.