விருதுநகர் மாவட்டம் மேட்டமலை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் பின்புறத்தில் உயர்அழுத்த மின்கம்பத்திற்குச் செல்லும் மின்சார வயர் அறுந்த நிலையில் கிடந்துள்ளது. இதே பகுதியைச் சேரந்த முனியசாமியின் மனைவி கல்பனா(44), காலில் செருப்பு கூட அணியாமல் காளியம்மன் கோயில் பின்புறத்தில் நடந்து சென்றுள்ளார்.
விருதுநகரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து பெண் உயிரிழப்பு! - women died due to electric shock at Virudhunagar
விருதுநகர்: கோயில் பின்புறத்தில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்து பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உயிரிழப்பு
அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில், கல்பனா தூக்கி விசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை