விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 34ஆவது வார்டு, கம்மாபட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பாக குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, அதன்மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக்கூறி அப்பகுதி பெண்கள் விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள நகராட்சி ஆணையரின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்! - sewerage
விருதுநகர்: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கம்மாபட்டி நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்டு அப்பகுதி பெண்கள் முறையிட்டுள்ளனர்.
நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்
இதையடுத்து , குடிநீர் குழாய் இணைப்பில் உள்ள பிரச்னையை உடனடியாக சரி செய்வதாக நகராட்சி ஆணையர் உறுதியளித்தையடுத்து, அங்கு கூடியிருந்த பெண்கள் கலைந்து சென்றனர்.