தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்: ஒப்பாரி வைத்து போராட்டம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

விருதுநகர்: அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

By

Published : Feb 24, 2021, 9:40 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளான இன்று (பிப்.24) அவர்கள் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த தமிழரசி (45) என்ற பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை காவல் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details