விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே 17 வயது சிறுவனை காதலிப்பதாகக் கூறி, கன்னியாகுமரி வரை கடத்திச் சென்ற 33 வயது பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் அருகே உள்ள தாட்கோ காலனியை சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியிலுள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்தார்.
அதே செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்த சேத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சேத்தூர் மற்றும் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.