இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தா கோயில் வனப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இராஜபாளையம் அடுத்துள்ள சேத்தூர்,தேவதானம், தளவாய்புரம் பகுதியிலிருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று கரோனா தொற்று அச்சமின்றி குளித்து மகிழ்கின்றனர்.
குறிப்பாக 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்களுக்கு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால், குழந்தைகளுடன் உணவு கட்டிக்கொண்டு ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். இது ஒருபுறமிருக்க மதுப்பிரியர்கள் ஆற்றுப் பகுதிகளில் அமர்ந்து மதுக் குடித்துவிட்டு செல்கின்றனர்.