விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் அருகேயுள்ள காந்திர நகரைச் சேர்ந்தவர் அழகர் (49). இவரது மகள் பானுரேகா (20). இவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அழகரின் தங்கை ஜானகி என்பவரது மகன் ராஜ்குமார் (26) என்பவருக்கும் பானுரேகாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமார் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இதனால், பானுரேகா தனது தந்தை வீட்டிலிருந்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். குடும்ப வாழ்க்கையில் ராஜ்குமாருக்கும் பானுரேகாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற பானுரேகா வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பானுரேகாவை காணவில்லையென பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அழகர் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பானுரேகாவை தேடி வந்தனர். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே விராலிமலையில் உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.