திமுக சடடப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என்ற அறிவிப்பு மாணவர் சமுதாயத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.
திமுகவை பின்தொடர்ந்தது முதலமைச்சர் பழனிசாமி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநில அரசு இந்த அறிவிப்பை கலந்தாய்வின் போதே அறிவித்திருக்கலாமே.
தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணதை அரசே செலுத்தும் என அறிவிப்பதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம். அமித்சா வருகைக்காக காத்திருந்தார? செல்லக்கிளி புருசன் செவ்வாய் கிழமை செத்தானாம் வீடு வெறிச்சோடி இருக்கேனே வெள்ளிகிழமை அழுதாலாம் என செவ்வாய்கிழமை (நவ.17) அன்றே அறிவித்திருக்கலாமே.