தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் தட்டுப்பாடு : கொட்டாங்குச்சியில் தண்ணீர் சேமிக்கும் அவலம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால், கிராம பெண்கள் வெகு தூரம் சென்று பலமணி நேரம் காத்திருந்து கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

water

By

Published : Jun 25, 2019, 6:52 PM IST

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது முத்துராமலிங்க புரம் கிராமம்.

இக்கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் ஆதாரம் தாமிரபரணி, குண்டாறு நீர் ஆகும்.

இக்கிராம மக்களின் அன்றாட தண்ணீர் தேவைகளுக்காக ஊராட்சி சார்பில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், மினி பம்பும் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாததால் ஆறுகள், குளங்கள், கண்மாய் ஆகியவை நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது.

இதனால் சண்டைக்குப் பயந்து பாதி பெண்கள் தண்ணீர் பிடிக்கச் செல்லாமல் ஆற்றை நோக்கி இரவு பகலும் பாராமல் மணிக்கணக்கில் காத்து கிடந்து ஊற்று நீரைப் பிடித்துப் பருகி வருகின்றனர். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் அனைத்து பகுதியிலும் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், ஆங்காங்கே மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, அளவுக்கு அதிகமாக ஆற்று மணல் அள்ளப்படுவதால் ஊற்றில் போதிய அளவு தண்ணீர் ஊறுவதில்லை.

இதனால் , ஒரு குடம் தண்ணீருக்காகப் பல மணி நேரம் காத்துக் கிடந்து குண்டாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட, சுமார் 15 அடி தோண்டப்பட்ட ஊற்றில் இறங்கி அகப்பையில் தண்ணீர் இறைக்க வேண்டி உள்ளது.

குடிநீருக்காக இக்கிராம பெண்கள் பலமணி நேரம் செலவிட வேண்டியுள்ளதால், அவர்கள் குடும்ப உறுப்பினர்களைச் சரியாக பார்த்துக்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தாமிரபரணி மூலம் வழங்கப்படும் நீர் போதுமானதாக இல்லாததால் தண்ணீருக்காக பெண்கள் சண்டையிட்டும் வருகின்றனர். இந்த சண்டைக்குப் பயந்து, பாதி பெண்கள் தண்ணீர் பிடிக்கச் செல்லாமல் ஆற்றை நோக்கி இரவு பகல் பாராமல் மணிக்கணக்கில் காத்து கிடந்து கொட்டாங்கச்சியில் ஊற்று நீரைப் பிடித்துப் பருகி வருகின்றனர்.

ஆகவே, இப்பகுதியின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நீர் அனைத்து பகுதியிலும் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details