தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்! - மக்கள் கோரிக்கை

விருதுநகர்: தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிவருவதால், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

waste-water-due-to-breakage-in-joint-drinking-water-project-pipe
waste-water-due-to-breakage-in-joint-drinking-water-project-pipe

By

Published : Feb 7, 2021, 12:02 PM IST

விருதுநகர் மாவட்டம் ஆத்துபாளையத்திலிருந்து விருதுநகர் டவுன் உள்ளிட்ட பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அருவியாக பொங்கி அங்குள்ள சாக்கடை வழியே கழிவு நீருடன் சேர்ந்து வீணாகிவருகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் அலுவலர்கள் உடனடியாக தண்ணீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: முத்தூட் நிதி நிறுவன கொள்ளையர்கள் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details