விருதுநகரில் நேற்று (மார்ச் 7) பாஜக தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய போக்குவரத்து துறை இணை அமைச்சரும் முன்னாள் இராணுவ அலுவலருமான வி.கே.சிங் கலந்து கொண்டார். தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பேசிய வி.கே. சிங், "இளம் வாக்காளர்களிடமும், முதல்முறையாக வாக்களிப்பவர்களிடமும் பாஜக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை பெற வேண்டும். பாஜகவின் திட்டங்களை பொதுமக்களிடமும் விளக்க வேண்டும்.
கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் நாம் வலிமையாக இல்லை. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிட வேண்டும். அதற்கு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது அவசியம். இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே நமது நோக்கம். நாம் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.