விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, நேற்று (ஏப். 7) தேமுதிக சார்பில் எம்.ஜி.ஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "விருதுநகர் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குத் தமிழ்நாடு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
சிபிசிஐடி விசாரணை செய்கிறது என்று அரசு மக்களை முட்டாளாக்க நினைக்காமல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை வேண்டும். அப்படி வழங்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்.
ஓட்டுப் போட்ட மக்களுக்குத் தண்டனை:திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்று மக்கள் தற்போது உணர்ந்து கொண்டார்கள். திமுக, ஒட்டு போட்ட மக்களுக்கு வரி உயர்வை வழங்கி வருகிறது. இதனை மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும்.