சாத்தூர் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி மதுரை ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, படந்தால் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா (30) உயிரிழந்தார்.
தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜெயா (50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (32) என்பவர் உயிரிழந்தார்.