விருதுநகரில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் சக்திசிவானி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் யோகாவில் மாநில, தேசிய அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
யோகாவில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி! - மாணவி
விருதுநகர்: யோகாசனத்தில் உலக சாதனை படைத்து நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பத்தாம் வகுப்பு மாணவி இடம் பெற்றுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தன் தலையில் தண்ணீர் குவளையில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு கீழே விழாமலும், மெழுகுவர்த்தி அணையாமலும் தொடர்ந்து 50 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நோபல் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதே மாணவி, இதற்கு முன்பு மூன்று அடி நாற்காலியில் இருந்துகொண்டு திரிவிக்ரமாசனம் எனும் யோகாசனத்தை 11 நிமிடத்தில் செய்து யுனிவர்சல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இச்சாதனையை படைத்த மாணவி சக்திசிவானியை பயிற்சியாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.