தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனச் சோதனையில் சிக்கிய மான் தலை, மான்கறி - நால்வர் தப்பி ஓட்டம்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன சோதனையின்போது வேட்டையாடிக் கொண்டு வரப்பட்ட மான் தலை, மான்கறியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

viruthunagar deer killed
viruthunagar deer killed

By

Published : Oct 16, 2020, 4:58 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கிருஷ்ணன் கோயிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் காவல்துறையினரை கண்டதும் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடினர். பின்பு காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்ததில் வேட்டையாடிக் கொண்டு வரப்பட்ட மான் தலை, சுமார் 5 கிலோ மான் கறி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணன் கோயில் காவல்துறையினர் மான்கறியை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூருவில் ரூ.50-க்கு கஞ்சா சாக்லேட்!

ABOUT THE AUTHOR

...view details