தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்! - borewell rescue trichy

விருதுநகர்: இரண்டு மாதங்களாக மூடப்படாமலிருந்த ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் தாமாக முன்வந்து மூடியுள்ளனர்.

viruthunagar

By

Published : Oct 27, 2019, 1:52 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் தமிழத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் முஸ்லிம் தெரு பகுதியில் இரண்டு மாதங்களாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றை அப்பகுதி மக்கள் இன்று மூடினர்.

இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீருக்காக ஆழ்துளை கிணறு போடப்பட்டு போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆழ்துளை கிணற்றை அப்படியே விட்டுவிட்டனர். தற்போது சிறுவன் சுஜித் ஆழ்துளைக்குள் விழுந்த சம்பவத்தால் அச்சமடைந்த அப்பகுதியினர் மூடப்படாமலிருந்த ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூடியுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றை மூடிய மக்கள்

மேலும், இனி குழந்தைகள் சுதந்திரமாக வீதிகளில் விளையாடும்போது பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் தாமாக முன்வந்து அதனை மூடினால் சிறப்பாக இருக்கும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணறுகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும்!

ABOUT THE AUTHOR

...view details