விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில், தென் தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்றதாகும். இந்தக் கோயிலின் உண்டியல் திறக்கப்பட்டபோது இதில் 33 லட்சத்து 22 ஆயிரத்து 211 ரூபாய், 131 கிராம் தங்கம், 496 கிராம் வௌ்ளி இருந்தன.
காணிக்கையை எண்ணும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, ஐயப்ப சேவா சங்கம், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.