விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து(26) என்ற இளைஞர். தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வத்திராயிருப்பு - அழகாபுரி முக்கிய சாலையில் கண்ணை கட்டிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்கள் 12 விநாடியில் ஓடிக் கடந்தார்.