தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கிராமிய கலைஞர்கள் - விருதுநகர் கிராமிய கலைஞர்கள்

விருதுநகர் : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 5000 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி 50க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Virudunagar village artistes
Virudunagar village artistes

By

Published : Jun 1, 2020, 8:10 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தக் கூடிய கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 கிராமியக் கலைஞர்களின் குடும்பங்கள் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

எந்த ஒரு கோயில் நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறாத காரணத்தால் கிராமிய கலைஞர்கள் வேலையிழந்து கஷ்டப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு நல வாரியம் மூலம் அறிவித்த 2000 நிவாரணத் தொகையும் இதுவரை நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு வந்து சேரவில்லை எனவும் இந்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

கிராமிய கலைஞர்கள்

மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமியக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு மாதம் ரூபாய் 10,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி 50க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details