விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வுமேற்கொண்டார். குறிப்பாக திருத்தங்கல் அரசு மருத்துவமனை ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த ராஜேந்திர பாலாஜி - Virudunagar district News
விருதுநகர்: பல்வேறு பகுதிகளில் ஆய்வுமேற்கொண்ட பால்வளத்து றை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம், பாதாளசாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை விரைவாக நடைபெற்றுவருகிறது.
அதன் காரணமாக சரிவர சாலைகள் சரிசெய்யாமல் பள்ளம் இருப்பதாக மக்கள் கோரிக்கைவைத்தனர். அதை நானும் நேரில் பார்த்தேன். விரைவில் இந்தப் பணிகள் முடிவடைந்து சாலைகளை உடனடியாக சீரமைக்க அலுவலர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்தில் அனைத்து சாலைகளும் போடப்படும் எனக் கூறினார்.