விருதுநகர் மாவட்டம் இராசபாளையம், சாத்தூர் காவல் துறையினர் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிபவர்களுக்கு நூதன முறையில் கரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
முன்னதாக, அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றித் திரிந்தவர்களின் காணொலி வெளியிடுதல், உறுதிமொழி எடுக்கவைத்தல் உள்ளிட்டவற்றை செய்துவந்தனர்.
கரோனா வைரஸ் உடையணிந்து விழிப்புணர்வு இந்நிலையில், காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் நூதன முறையில் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மேல் கரோனா வைரஸ் பாய்ந்து தாக்குதல் நடத்துவது போல சித்தரித்து அனைத்து தெருக்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
மேலும், முகக்கவசமின்றி சாலைகளில் பயணிப்போருக்கு காவல்துறையினர் சார்பில் முகக்கவசமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட ஆர்.எஸ்.கணேஷ்!