விருதுநகர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆதித்தமிழர் கட்சியினர் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட்தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தீர்வாக அமைந்துள்ளது. எனவே தேர்வை தடைசெய்ய வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் வழங்கிய அனுமதி நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால் தடையை மீறி ஆதித்தமிழர் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாகத் தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.