விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 3 ஆயிரத்து 394 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இதையடுத்து தற்போது புதிதாக 169 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 563ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 626 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
விருதுநகரில் மூவாயிரத்து 500ஐ கடந்த கரோனா பாதிப்பு - விருதுநகர் மாவட்டம் கரோனா நிலவரம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.
விருதுநகரில் மூவாயிரத்து 500ஐ கடந்த கரோனா பாதிப்பு
ஆயிரத்து 909 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா தொற்றின் காரணமாக நேற்று (ஜூன் 20) ஒருவர் உயிரிழந்தார். தற்போது வரை மாவட்டத்தில் நோய்த் தொற்றின் காரணமாக 28 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் 107 இடங்களில் முழு ஊரடங்கு!