தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய ஆட்சியர்! - தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய ஆட்சியர்

விருதுநகர்: தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் மதிய உணவு அருந்தியுள்ளார்.

virudunagar District Collector eats lunches with the cleaning staff
virudunagar District Collector eats lunches with the cleaning staff

By

Published : Apr 22, 2020, 11:51 AM IST

கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தம் 95 நபர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய ஆட்சியர்

அதில், தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கியப் பின், அவர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் மதிய உணவு உட்கொண்டார்.

இதையும் படிங்க:கரோனா வாரியர்ஸ்ஸூக்கு அட்சதை தூவி கவுரவித்த மணல்மேடு பேரூராட்சி!

ABOUT THE AUTHOR

...view details