விருதுநகர்:இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் கொடுத்த 7 நாள் காவல் முடிந்து இன்று (ஏப். 4) ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, உடல்நிலை பிரச்னை காரணமாக ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோருக்கு கடந்த மூன்று நாள்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.04) காலை ஹரிஹரன் உள்ளிட்ட மூவருக்கும் மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. இதையடுத்து, ஹரிஹரனுக்கு மட்டும் தலையில் ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.