தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயற்சி - Virudhunagar children's Fire

விருதுநகர்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயற்சி
பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயற்சி

By

Published : Feb 17, 2020, 5:23 PM IST

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு முருகானந்தம் என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ரமேஷ் கண்ணன் என்பவர் வெற்றிபெற்றார். முருகானந்தம் தன்னை தேல்வியடையச் செய்த கிராமத்தினர் மேல் கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் ரமேஷ் கண்ணனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நான்கு குடும்பத்தினருக்கு முருகானந்தம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயற்சி

இதனையடுத்து அந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது திடீரென சுப்புலட்சுமி, பாண்டிச்செல்வி ஆகியோர் தனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள், குழந்தைகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details