விருதுநகர் கத்தாளம்பட்டி தெருவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் சிவலிங்கம் தனது பிறந்தநாளை சக கல்லூரி நண்பர்களுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது! - விருதுநகர்பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
விருதுநகர் : பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிவலிங்கம், அவரது நண்பர்கள் மகாலிங்கம், செல்வக்குமார், சிவப்பிரகாஷ், வைரவேல், அருண்குமார், தெய்வகுமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டா கத்தி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!