தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு 27ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கவுள்ளது.
இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த பட்டம், பூட்டு சாவி, டெலிபோன், தபால்பெட்டி, கட்டில், ரேடியோ உள்ளிட்ட சின்னங்களை விண்ணப்பங்களின் வரிசைப்படி ஒதுக்கீடு செய்யப்படாமல் தவறுதலாக உள்ளது.