74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு பொது மருத்துவமனை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர். தவ்ஹீத் ஜமாத் தலைமை அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் மாரிராஜன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.