விருதுநகர் மாவட்டத்தில் மணல், கனிம வளங்களை திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 மற்றும் சுரங்கங்கள், கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு! - விருதுநகர் மாவட்ட செய்திகள்
விருதுநகர்: மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்: விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு! Virudhunagar Superintendent of Police announces thuggery law if involved in sand theft](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:48:50:1599049130-tn-vnr-03-sp-report-vis-script-7204885-02092020173031-0209f-1599048031-546.jpg)
மேலும் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க 91500 11000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும்; மேலும் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.