தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் பிரச்னை: அருப்புக்கோட்டையில் இளைஞர் தற்கொலை! - Virudhunagar Suicide

விருதுநகர்: கடன் பிரச்னை காரணமாக இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide  விருதுநகர் இளைஞர் தற்கொலை  அருப்புக்கோட்டை இளைஞர் தற்கொலை  கடன் பிரச்சனை இளைஞர் தற்கொலை  Virudhunagar Suicide  Aruppukottai Suicide
Virudhunagar Suicide

By

Published : Apr 21, 2020, 12:54 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாட்சி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்திவருகிறார். இவருக்கு சரண்யா (24) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.

இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாலமுருகன் நடத்திவரும் வெல்டிங் பட்டறையை நடத்தமுடியவில்லை. இதனால் அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று காலையில் கடைக்குச் சென்ற பாலமுருகன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மனைவி சரண்யா உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, உறவினர்கள் பாலமுருகன் நடத்திவரும் வெல்டிங் பட்டறைக்குச் சென்று பார்த்தபோது உள்புறம் தாழிட்டு பாலமுருகன் சேலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினர்

ஊரடங்கு காலங்களில் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் வாடிக்கையாளரிடம் மாதந்திர தவணைத் தொகை (EMI), வாடைகை வீட்டில் வசிப்பவர்களிடம் வாடகை உள்ளிட்டவை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடன் பிரச்சனையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஒரு வயது மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை

ABOUT THE AUTHOR

...view details