விருதுநகரை சேர்ந்தவர் தனியார் பள்ளி மாணவன் ஆர்.ஷியாம் கணேஷ் அங்குள்ள தனியார் பள்ளியில் பதினோறாம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும், யோகாசனத்தில் தேசிய அளவில் இரண்டு பதக்கங்களை பெற்றிருக்கும் அவர், உலகளவில் இரண்டு சாதனைகளும் படைத்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு இவருக்கு 1.5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கியது.
இந்நிலையில் இன்று(டிச.3) 850 கிலோ எடையுள்ள கார் ஒன்றை கயிற்றால் கட்டி தனது இடுப்பில் இணைத்து சக்கராசனம் செய்தபடியே 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று மேலும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இது போன்ற சாதனையை யாரும் செய்யாததால் ஷியாமின் சாதனை, நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றது.