விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம், செஞ்சிலுவை சங்கம், தனியார் மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து ரத்ததான முகாமினை நடத்தினர்.
இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். பின்னர் ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு, குளிர் பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.