தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு - ஆடி அமாவாசை, தர்ப்பணம் ரத்து - கரோனா பாதிப்பால் ஆடி அமாவாசை ரத்து

விருதுநகர்: கரோனா பாதிப்பால் திருச்சுழி திருமேனிநாதர் கோயில் ஆடி அமாவாசை, குண்டாற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆடி அமாவாசை, தர்ப்பணம் ரத்து
ஆடி அமாவாசை, தர்ப்பணம் ரத்து

By

Published : Jul 20, 2020, 5:32 PM IST

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழி திருமேனிநாதர் ஆலயம் பிரசித்தி பெற்றது.

திருச்சுழி ஸ்தலமானது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு அடுத்தபடியாக உள்ளது. ரமணமகரிஷி பிறந்த இடம் என்பதால் சுற்றுலாதலமாகவும் உள்ளது.
தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால், இன்று (ஜூலை 20) ஆடி அமாவாசை தரிசனமும் கிடையாது என்றும், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் போன்ற நிகழ்ச்சிகளை குண்டாற்றில் நடத்தத் தடை விதித்தும் திருச்சுழி காவல் துறையினர் உத்தரவு பிறப்பித்தனர்.

அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் திருச்சுழி குண்டாற்றிற்கு வராததால் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை - ஆடி அமாவாசை திருவிழா ரத்து

ABOUT THE AUTHOR

...view details