விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹர்ஷ நிவேதா என்ற 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு பயின்றுவருகிறார். யோகா செய்வதில் சிறுவயது முதலே அதிக நாட்டம் கொண்டவரான இவர், அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு, உலக கின்னஸ் சாதனை, புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அச்சிவர்ஸ் போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று புதிய உலக சாதனையாக தன்னுடைய இரு கண்களையும் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல் கலாம் ஓவியம் வரைதல், க்யூபை சரிசெய்தல், ஒன்றரைக் கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 25 வித்தியாசமான செயல்களை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தார்.
கண்களைக் கட்டிக்கொண்டு ஓவியம் வரையும் ஹர்ஷ நிவேதா இதன் மூலம் அவர், யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சீனாவைச் சேர்ந்த சிறுவன் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரு கியூப் சரி செய்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. அதனை முறியடித்ததற்காக மாணவி ஹர்ஷ நிவேதாவிற்கு 'டேலண்ட் ஹிட் வேர்ல்டு ரெக்கார்டு' விருது வழங்கப்பட்டது.
கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் ஹர்ஷ நிவேதா கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிஸ் இல்லாத பல சாதனைகளை செய்த மாணவி ஹர்ஷ நிவேதாவிற்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இது குறித்து மாணவி ஹர்ஷ நிவேதா பேசுகையில், "நான் செய்த இந்த சாதனை கண்பார்வையற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். என்னுடைய சாதனையை கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன். எதிர்காலத்தில் யோகாவை அனைவருக்கும் இலவசமாக கற்றுக்கொடுப்பதே என்னுடைய லட்சியம்" என்றார்.
இதையும் படிங்க: டெங்கு ஒழிப்பில் மும்முரம் காட்டும் சுகாதாரத்துறை!