விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சிப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து இன்று துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியம் வழங்கக்கோரி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்! - virudhunagar sanitary workers protest
விருதுநகர்: ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியம் வழங்கக்கோரி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்!
மேலும் மதுரை மண்டல அலுவலர்களின் குளறுபடி காரணமாகவே துப்புரவுப் பணியாளர்களின் டிசம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றஞ்சாட்டினர். வரும் காலங்களில் ஊதிய பிரச்னைகளை தீர்க்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கனிமொழி தலைமையில் சாலை மறியல் - கோவில்பட்டியில் பரபரப்பு
TAGGED:
Tn vnr sweeper protest